பூனைகாலி விதை -
பூனைகாலி விதையை பொடி செய்து , அரை கிராம் அளவு எடுத்து தினமும் பாலில் அருந்தி வர மேக நோய்கள் நீங்குவதோடு ஆண்மை சம்மந்தமான கோளாறும் நரம்பு தளர்ச்சியும் நீங்கும் .
பூனைகாலி விதை , சுக்கு திப்பிலி , கிராம்பு கருவாப் பட்டை , வெண் சித்திர மூலம் வேர்ப்பட்டை , பூனைக்கண் குங்கிலியம் இவற்றை எடுத்து நீர் விட்டு அரைத்து மிளகளவு மாத்திரைகளாக உருட்டிக் கொள்ள வேண்டும் .இந்த மாத்திரையில் 1 மாத்திரை வீதம் தினமும் காலை மாலை இருவேளை உண்டு வர வயிற்று புழு , குன்மம் , வயிறு சம்மந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும் .
உடல் வன்மை குறைந்தவர்கள் பூனைகாலி விதை , சாதி பத்திரி , சமுத்திர பச்சை , சூடம் , வசம்பு இவற்றை குறிப்பிட்ட அளவு எடுத்து தினமும் காலை மாலை அரை கிராம் முதல் 1 கிராம் வரை பாலுடன் கலந்து அருந்த ஆண்மை பெருகும் .
ஓரு லிட்டர் பசும் பாலில் 350கிராம் பூனைகாலி விதையை போட்டு பால் வற்றும் வரை காய்ச்ச வேண்டும் . பின்பு விதையை காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . பின்பு ஓரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தேவையான அளவு நெய் ஊற்றி பொடியாக்கிய விதையை இதனுடன் தட்டி இளம் வறுப்பாக வறுக்க வேண்டும் . பின்பு சீனி பாங்கு இரண்டு பங்கு கலந்து நன்கு கிளறி சுண்டக்காய் அளவு உருட்டி தேனில் ஊற வைக்க வேண்டும் . இந்த உருண்டையை காலை மாலை உண்ண வெள்ளை வெட்டை , பெண்களுக்கு மாத விலகின் போது உண்டாகும் அதிகமான இரத்த போக்கு குணமாகும் .
பூனைகாலி வேரை முறைபடி கஷாயமிட்டு 30 மி.லி முதல் 60 மி.லி வீதம் அருந்தி வர ஊழி நோய் , சுரம் முதலியவைகளில் தோன்றும் வாதம் , பித்தம் , கபம் நீங்கும் .
பூனைகாலி வேரை அரைத்து யானைகால் நோயால் ஏற்பட்ட வீக்கத்திற்கு பற்று போடலாம் . நல்ல பலன் அளிக்கும் .
பூனைகாலி விதை தேள் கடிக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது .
பூனைகாலி விதையை மேல் உள்ள தோலை நீக்கி ஆட்டுப் பாலில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி , காயவைத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . பின்பு அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்து பாலில் கலந்து உண்டு வர ஆண்மை கோளாறு , நரம்பு தளர்ச்சி , உடல் பலகீனம் சரியாகும் .
பூனைகாலி விதை சித்த மருத்துவத்தில் மிக முக்கியமாக பயன்படுகிறது .
....................... நன்றி .....................
0 Comments