Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

வெள்ளருகு பயன்கள் | Velllarugu Uses In Tamil |enicostema-axillare | Herbals | மூலிகைகள் | Siththarkal Ulagam

Siththarkal Ulagam :-


வெள்ளருகு :-

இந்த பதிவில் வெள்ளரு பற்றி பார்க்க போகிறோம் . 


வெள்ளருகானது மலத்தை இளக்கி ,பசியை தூண்டி ,உடலை உரமாக்கும் தன்மை உடையது.காய்ச்சல் , வாதம் ,தோல் வியாதி ,வயிற்று  உப்சம் ,பாம்பு கடி ,அஜீரணம்,தொழுநோய் , மற்றும் நீரழிவு நோயை குணப்படுத்த கூடியது .

பாம்பு கடித்தவர்களுக்கு வெள்ளருகு செடியை வேருடன் எடுத்து சுத்தமாக கழுவி இடித்து சாறு எடுத்து 20 மி.லி முதல் 30 .மி.லி வரை உள்ளுக்குள் கொடுக்க வேண்டும்.வெளியில் கடித்த இடத்தில் வெள்ளருகுவை அரைத்து பற்று போட வேண்டும்.

உள்ளுக்குள் கொடுக்க வாந்தி பேதியாகும்.மீண்டும் ஓருமுறை கொடுக்க நச்சு வெளியாகும்.வெள்ளறுகு சாப்பிடும் சில நாட்களுக்கு புளி , உப்பு நீங்கி பத்தியம் இருக்க வேண்டும்.

வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்து காலை வேளையில் சொறி , சிரங்கு , அரிப்பு , தேமல் உள்ளவர்கள் நன்கு தேய்த்து பூசி 1 மணி நேரம் கழித்து குளித்து வர அவை சரியாகும்..

வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து இடித்து அதனுடன் பத்து மிளகு,ஓரு தூண்டு சுக்கு, சிறிது சீரகம், போன்றவற்றை இடித்து 800 மி.லி நீர்விட்டு கொதிக்கவைத்து 200 மி.லி வரும் வரை வற்றவைத்து இறக்கி வடிகட்டி 100 மி.லி அளவு எடுத்து காலை,  மாலை என இருவேளை அருந்தி வர கீல்வாதம் ,நரம்பு கோளாறு சரியாகும்.

வெள்ளறுகு செடியுடன் சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு  சேர்த்து அரைத்து பாலில் கலந்து பெண்களுக்கு  கொடுக்க நாட்பட்ட வெள்ளைப்படுதல்  சரியாகும்.

வெள்ளருகு செடியின் முழு சமூலத்தையும் எடுத்து சிறிது சீரகம் சேர்த்து கொதிக்க வைத்து குழந்தைகளுக்கு கொடுக்க நீரழிவு நோய் கட்டுபடும்..

                                           நன்றி.............


Tags:-

Siththarkal,Siththarkal Ulagam, Siddhar,Siddharkal ,Mooligaikal ,Mooligai maruthuvam,வெள்ளருகு,வெள்ளறுகு,வெள்ளறுகு பயன்கள் , வெள்ளருகு பயன்கள்,மூலிகை,மூலிகைகள் ,மூலிகை மருத்துவம் ,தமிழ் மருத்துவம்,வெள்ளருகு மருத்துவ பயன்கள்,வெள்ளறுகு மருத்துவ பயன்கள்,Vellarugu ,Vellarugu Use In Tamil,

Post a Comment

0 Comments