Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

ஓரு குழந்தை உருவாகும் வீதம் பற்றி அகத்திய சித்தர் அன்றே கூறியுள்ளார் ..

அகத்திய சித்தரின் பாடல் :-





"சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய் இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம் சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும் " -"அகத்தியர்"

"முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே."-"அகத்தியர்"

விளக்கம் :-


ஓரு ஆணின் சுக்கிலத்தோடு பிராண வாயு சென்றடைந்து , அது கிளர்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையுமாம் .  

இந்த தருணத்தில் உறவு நடக்கும் போது , பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலமானது கலந்து , வாத , பித்தம் , கபம் என்று சொல்லக் கூடிய மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து ,, சிறு குமிழி போல் தோன்றி கருப்பையில் உட்சென்று தங்கி வளர துவங்குமாம் .

பின்பு 25 வது நாளில் முளை போல தோன்றும் என்று அகத்திய மாமுனிவர் கூறுகிறார் . இந்த நிலையில் கருவுக்கு உயிர் இருக்காது என்று அன்றே அகத்திய சித்தர் கூறியுள்ளார் . 

முதல் மாதத்தில் உண்டாகும் இந்த மூளை பின்னர் வளர்ந்து கட்டி போல் ஆகுமாம் . 

 இரண்டாவது மாதத்தில்  பிடறி , தோள் , முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம் 

மூன்றாவது மாதத்தில் விலா , இடுப்பு , உடல் போன்றவை உருவாகுமாம் .இந்த மாதத்தில் தான் அந்த பிண்டத்தில் உயிர் உருவாகுமாம் . இந்த கட்டத்தில் உடலோடு உயர் சேருமாம்,.


                                                                     .............  நன்றி ............

Post a Comment

0 Comments