Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பெண்மயச் சித்து - Penmaya Sithu - Agathiyar 64 siththukkal

 பெண்மயச் சித்து :- 






பாரப்பா பிரமகுலச் சித்து சொன்னேன் 
பதிவான பெண்மயத்தின் சித்துக் கேளு 
ஆரப்பா அறிவார்கள் காமரூபி 
அசுபதியி னாள்தனிலே கொண்டுவந்து 
நேரப்பா கருவினால் பித்தும் சேர்த்து  
நினைலாகத் தொனெடுத்து வைத்துக் கொண்டு 
சீரப்பா தாரமது கூடச்  சேர்த்து 
திறமாக ஜங்கோல தைலம் வாங்கே 

வாங்கியே கல்வதி லாட்டும் போது 
மயங்காமல் தயிலம்விட்டு மாட்டி ஆட்டிசூ 
ஓடங்கியே ஆட்டிவரி லெரன்ன சொல்வேன் 
ஓகோகோ   அருணநிற மையேயாகும் 
தீஙகில்லாச் சிமிழ்தனிலே பதனம்பண்ணி 
செங்கதிருஞ் சோதியுமா சேர்ந்த நாளில் 
பாங்குபெறத்தி லகமிட்டுப்  பசியேதான் 
பதிவாக ரேசகபரகமும் பண்ணே
பண்ணியே கும்பகத்தி னின்னாயானால் 
பாருளு ரதிமோகப் பெண்தானென்று 
சண்ணையொடு சயிக்கணைகள் பேசுவார்கள்
தன்மனதைத் தானடக்கம் சிரிப்புக் கொண்டு 
கன்னிகையே  உன்மனது என்று சொல்லிக் 
உன்னியே திலகமதை அழித்தா யானால் 
உடனின்ற பெண்தேடி ஏங்குவாரே
ஏங்கியே மனந்தளர்ந்து பெருமூச்சேகி 
என்ன சொல்வேனகக் மதன்ரதியோ மோகியோ பேயா 
மாங்குயில் போல் நின்ற பெண்ணை நினைக்குமுன்னே
தூங்குவது சொர்ப்பனம் போலாச்சே யென்று
சொல்வார்க ளனைவரும் துயரம் வைத்து 
பாங்குடனே பெண்மயத்தின் சித்தை நீயும் 
பகராதே யொருவருக்கும் பண்பாய் தானே


விளக்கம் :- 


காமரூபியை அஸ்வினி நாளன்று கொண்டு வந்து கருவினால் பிச்சும் சேர்த்து தாரமும் சேர்த்து அந்த கலவையை கொண்டு வந்து ஐங்கோல தைலம் சேர்த்து, அதை கல்வதிலிட்டு ஆட்ட அருணநிற மைபோலாகும் . பின் இதை சிமிழியில்  சேமித்து பத்திரபடுத்திக் கொள்ள வேண்டும் . பின்பு செங்கதிரும் ஜோதியும் சேர்ந்த நாளில் திலகமிட்டு கும்பித்து நின்றால் , ரதி என்றும் , மோகின பெண் என்றும் தம்மை கண்டு மயங்கி நிற்பார்களாம் . திலகத்தை அழித்தால் பெண்ணை காணாது ஏங்குவார்களாம் . 

Post a Comment

1 Comments

  1. ஐயா, பதிவுகளில் பட்டுகளின் ஆதாரத்தையும் பதிவுசெய்தால் நம்பிக்கை கூடும். வாழ்த்துக்கள் பஹவான்-8072004930

    ReplyDelete