அமுக்கரா கிழங்கு
அமுக்கரா கிழங்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் . அமுக்கரா கிழங்கின் மேல் உள்ள தோலை நீக்கி , பாலில் போட்டு சுண்ட காய்ச்சி உலர்த்தி பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . அந்த பொடியில் 2 கிராம் அளவு எடுத்து,காலை இரவு உணவுக்குப் பிறகு பாலில் கலந்து உண்டு வர நல்ல பலன் கிடைக்கும் . ஆண்மை கோளாறு , உடல் பலகீனம் மற்றும் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது .
மற்றொரு முறை --
அமுக்கரா கிழங்கு பொடி ஓரு பங்கும் சுக்கு , மிளகு , திப்பிலி , சிறுநாகப்பூ , அரை பங்கும் எடுத்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும் . பின்பு அந்த பொடியில் இரண்டு கிராம் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்தால் சளி , இருமல் , இளைப்பு போன்றவை குணமாகும் . தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் .
மேலும் ஆண்மை பலகீனம் உள்ளவர்கள் தண்ணீர் விட்டான் கிழன் மேல் தோலை நீக்கி , பொடித்து அதனுடன் பூனைகாலி விதை மற்றும் அமுக்கரா கிழங்கு பொடி இரண்டையும் பொடித்து 3 கிராம் அளவு பொடி எடுத்து சூடான பாலில் கலந்து காலை மாலை உணவுக்கு பிறகு குடிக்க வேண்டும் .
நன்றி
0 Comments